எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள், இல்லையெனில் சாக வேண்டியதுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்தநாள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீமான், பிரபாகரனை பயங்கரவாதி என்றும் நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்றும் கூறும் நிலைத்தான் தமிழகத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
ரஜினி அரசியலுக்கு வரட்டும், I'am waiting என பேசினார். மேலும் நாட்டை யார் முதலில் விற்பது என்பதுதான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு இடையேயான வித்தியாசம் என்றார். எனது கட்சியினர் மீது வழக்கு தொடுத்தவர்கள், சிறையில் வைத்தவர்கள் எங்கள் ஆட்சி வருவதற்கு முன்பு இறந்துவிடுங்கள் எனவும் சீமான் எச்சரித்தார்.