மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவியுடன் குத்துச்சண்டை போடுவது போல பாவனை செய்த காட்சிகள் அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சென்னையை சேர்ந்த கலைவாணி என்ற மாணவி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். சென்னை ராயபுரத்தில் அந்த மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கலைவாணியுடன் குத்துச்சண்டை போடுது போல பாவனை செய்தார்.
அத்துடன் தானும் கல்லூரி படிக்கும்போது குத்துச்சண்டை வீரர் தான் என அந்த மாணவியிடம் தெரிவித்தார். இந்த காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களை ரசிக்கவும் வைத்தது.