தமிழ்நாடு

டிவிட்டரில் ட்ரெண்டாகும் கருணாநிதி

டிவிட்டரில் ட்ரெண்டாகும் கருணாநிதி

webteam

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-ஆவது பிறந்த நாள். இதனையொட்டி டிவிட்டரில் #HBDKalaignar94 என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழாவும், அவர் சட்டசபைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவும் திமுக சார்பில் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஏராளமானோர் அவருக்கு தங்களது சமூக வலைத்தள பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதால், #HBDKalaignar94 #Karunanidhi ஆகிய ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

முன்னதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், திமுக தலைவர் கருணாநிதியை அவரின் பிறந்த நாளன்று தொண்டர்கள் யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என தெரிவித்திருந்தார். ஆனாலும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது வீடு அமைந்துள்ள கோபாலபுரம் நோக்கி தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கோபாலபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 
இதுதவிர கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க http://wishthalaivar.com/ என்கிற இணையதளமும் திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சென்றும் ஏராளமானோர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.