பல மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை என்று சொல்ல இயலாது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை என்று சொல்ல இயலாது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்.
இது குறித்து கூறும்போது “ பொதுமக்களோடு போலீசை இணைக்கும் ஒரு உதவியை செய்வது தான் அவர்களின் பணி. சில பகுதிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பதனை தன்னார்வலர்கள் என்று கூறுவார்கள். சில பகுதிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று கூறுவார்கள். மக்கள் சேவை செய்ய விரும்புபவர்கள் காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். காவல்துறை உதவி செய்வார்கள். வியாபாரிகளே தங்கள் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் எனக் கூறியுள்ளோம்.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸை காவல்துறையின் சில பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் யார் மீதாவது புகார் இருந்தால் அவர்களை பயன்படுத்த வேண்டாம். பழைய புகார் இருந்தால் உரிய விசாரணைக்கு பிறகு அவர்களை உதவிக்கு வைத்து கொள்ளலாம். ரோந்து பணிகளுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.நாங்கள் மக்கள் சேவை பணிக்கும், விழிப்புணர்வு பணிக்கு மட்டுமே அவர்களை பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் போலீசுடன் இருப்பார்கள். அவர்களின் ஒத்துழைப்பு காவல்துறைக்கு தேவை இருக்கிறது. அவர்கள் போலீசின் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. போலீசுடன் நின்று பொதுமக்களுக்கு அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களை பயன்படுத்தி வருகிறோம்" என கூறினார். ஆகவே"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்" சென்னையில் தடை என்று சொல்ல இயலாது.
144 தடை உத்தரவை மீறியதற்காக சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 87 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்”என்று கூறினார்.