தமிழ்நாடு

“வசந்தகுமார் பெயரில் இலவச பொருட்கள் விநியோகம்” - பொன்னார் குற்றச்சாட்டு

“வசந்தகுமார் பெயரில் இலவச பொருட்கள் விநியோகம்” - பொன்னார் குற்றச்சாட்டு

webteam

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த்குமார் பெயரில் இலவச பொருட்கள் வழங்கப்படு வருவதாக பாஜக ‌வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சுசீந்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கர்க்காடு பகுதியில் உள்ள அம்பேதகர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்வார்கள், அவர்களை தடுத்தால் உடனே தோல்வி பயம் என கூறுவதா ? தமிழகத்தில் ஊரை அடித்து உலையில் போடும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பணப்பட்டுவாடா சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி, மதம் மற்றும் ஜாதிய உணர்வுகளை தூண்டும் வகையில் பொய்யான பிரச்சாரங்களை செய்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் அவரின் நிறுவனங்களில் வைத்து பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் வருகிறது. மேலும் அவரது பெயரில் இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது” என்று குற்றம்சாட்டினார்.