தமிழ்நாடு

"சாதியை காரணம் காட்டி வளர்ச்சியை தடுக்கக் கூடாது" - மு.க.ஸ்டாலின்

"சாதியை காரணம் காட்டி வளர்ச்சியை தடுக்கக் கூடாது" - மு.க.ஸ்டாலின்

Veeramani

ஆதி திராவிடர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சி சாதியை காரணம் காட்டி தடுக்கப்படக் கூடாது என்பதே அரசின் சிந்தனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என உறுதி அளித்தார்.

தீண்டாமை பாகுபாடு காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் இன்றி சிலர், அதை தைரியமாக செய்வதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற சட்ட மீறல்கள் தடுக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.