தமிழ்நாடு

”கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு அமைப்பது உள்ட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்”- மா.சுப்பிரமணியன்

”கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு அமைப்பது உள்ட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்”- மா.சுப்பிரமணியன்

sharpana

”கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி சட்டமன்றக்குழு தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், "கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர ஊரடங்கை அமல்படுத்துவது, பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் இருப்பது, கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி உறுப்பினர் கொண்ட ஆலோசனை குழு அமைப்பது, கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு  உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

   “சென்னை மாநகராட்சியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை செய்து விழிப்புணர்வூட்டி வருகிறார்கள். ரெம்டெசிவர் கிடைக்காமல் மக்கள்  இறக்கிறார்கள் என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள். ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக நாளை முதல் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் விற்கப்படும். நோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு தனியார் மருத்துவமனைகளில் இருந்து  அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கிறார்கள். ஆரம்பகாலத்திலேயே கொரோனா பாதித்தவர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதற்கு விழிப்புணர்வு ஊட்டப்படும். கொரோனா பேரிடரை சம்பாதிக்கும் தொழிலாக தனியார் மருத்துவமனைகள் நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.