தமிழ்நாடு

'ஸ்டெர்லைட்டை மூடியதால் காப்பர் கிடைக்கவில்லை'- தங்கமணி

'ஸ்டெர்லைட்டை மூடியதால் காப்பர் கிடைக்கவில்லை'- தங்கமணி

webteam

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பேரவையில் இன்று நடந்த விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சாமி, திருவொற்றியூர் தொகுதியில் பறவை அமர்ந்தால் கூட மின்மாற்றி பழுதாவதாகவும், எனவே மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு தேவையான மின்மாற்றிகளை அமைக்க ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து காப்பர் பெறப்பட்டு வந்ததாகவும், தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அங்கிருந்து காப்பர் பெற முடியாத சூழல் இருப்பதாகக் கூறினார். 

மாற்று இடத்தில் இருந்து காப்பர் வாங்கி, மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் தேவையான இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.