தமிழ்நாடு

''குடிசையில் வசிப்பவர்களுக்கு கான்கிரிட் வீடுகள்'' - ஓ.பன்னீர்செல்வம்

webteam

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, மும்பை தாராவி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை அகற்றிவிட்டு, கட்டட வீடுகளை கட்ட துபாய் அரசுடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்திருப்பது போல், தமிழகத்திலும் குடிசை வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் 13 லட்சம் பேர் குடிசை வீடுகளில் வாழ்வதாக கணக்கெடுப்பில் தெரிய வந்திருப்பதாகவும், அவர்களுக்காக பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் தற்போது நான்கரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். விரைவில் பயனாளிகளுக்கு அந்த வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.