தமிழ்நாடு

“யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” - அழகிரி அரசியல் பற்றி கனிமொழி கருத்து

“யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” - அழகிரி அரசியல் பற்றி கனிமொழி கருத்து

Veeramani

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று மு.க.அழகிரி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி “ அவர் எப்படி செயல்படுவது என்பது அவரது முடிவு, அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இது ஜனநாயக நாடு, அதனால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம், அதுபற்றி கருத்து கூறவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.