தமிழ்நாடு

+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..!

+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..!

Rasus

+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகி உள்ளது.

அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். அவ்வாறு இல்லாமல் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு எழுத விரும்புவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை படிக்க வேண்டும். புதிய நடைமுறை வரும் 2020-2021-ஆம்  கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தற்போது +1, +2 வகுப்புகளில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் நடைமுறையே உள்ளது குறிப்பிடத்தக்கது.