நிதி பிரச்னை இருந்தாலும் அதனை அரசால் சமாளிக்க முடியும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பி தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது, “தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை ரூ10 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை இருந்ததில்லை. தமிழகத்தில் 7 வருட நிதி பிரச்னையை உடனே சரிசெய்ய முடியாது. எதிர்க்கட்சிகளே வரவேற்கும் அளவுக்கு முழு ஊரடங்கு நடவடிக்கையை எடுத்துள்ளோம். ஊரடங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் வேறு வழியே இல்லை” என்று கூறியுள்ளார்.