தமிழ்நாடு

'மீண்டும் தர்மமே வெல்லும்': ஓபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு – பெரியகுளத்தில் கொண்டாட்டம்

'மீண்டும் தர்மமே வெல்லும்': ஓபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு – பெரியகுளத்தில் கொண்டாட்டம்

webteam

சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால் பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கியது.

இதனை அடுத்து தேனி மாவட்டம் ஓபிஎஸ்-இன் சொந்த ஊரான பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக வெடி வெடித்து இனிப்புகள் வழங்கிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளதாக கூறி ஓபிஎஸ் தலைமையில் அதிமுக அனைத்து தொண்டர்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்துவோம் என தெரிவித்தனர்.