விளையாட்டு

தொப்பி.. தொப்பி.. மகளுடன் தோனி சேட்டை

தொப்பி.. தொப்பி.. மகளுடன் தோனி சேட்டை

webteam

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன், அவரது மகள் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் தோனியின் மனைவி மற்றும் மகள் நேரில் கண்டு களித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டிக்கும் முன்போ அல்லது போட்டியின் போதே தோனி மகள் ஜிவா செய்யும் செல்ல சேட்டைகள் இணையத்தில் வைரலாகும். பொதுவாக ஜிவாவுக்கும் சமூக வலைதளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற லீக் சுற்று போட்டியில் சென்னை அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதின . இந்தப்போட்டியை ஜிவா வழக்கம் போல் நேரில் கண்டு களித்தார். இதில் தோனி சிக்ஸர் அடித்து மேட்சை தித்திப்பாக முடித்து சென்னைக்கு வெற்றியை தேடி தந்தார்.

இந்தப்போட்டி முடிவடைந்த பின்னர் மைதானத்தில் தோனியும் - ஜிவாவும் விளையாடினர். தந்தையின் தொப்பியை கழட்டி குதித்து விளையாடும் அந்த காட்சியை ரசிகர்களும் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை தந்தை தோனியுடன் மகள் கொண்டாடிய தருணம் என அதனை தோனி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.