விளையாட்டு

கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி நிதான ஆட்டம்

கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி நிதான ஆட்டம்

JustinDurai

கடந்த 2வது போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இப்போட்டியில் ஆடவில்லை.  அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர் மற்றும் ஆவேஷ் கானுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 28 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடந்த இரண்டாவது போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இப்போட்டியில் ஆடவில்லை.  அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர் மற்றும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி களமிறங்கி உள்ளது. ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் ஜிம்பாப்வே அணி ஆடிவருகிறது.

இதையும் படிக்க: "நான் இன்னும் கேப்டனாகதான் இருக்கிறேன்" - வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்த வார்னர் பேச்சு!