விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் களமிறங்கிய யுவராஜ்

சாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் களமிறங்கிய யுவராஜ்

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அளிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் இந்திய வீரர் யுவராஜ் சிங் களமிறங்கினார். 

ஹர்திக் பாண்டியா அவுட் ஆன பின்னர் 25ஆவது ஓவரில் களமிறங்கிய யுவராஜ், இந்திய அணியின் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஜெர்ஸியுடன் களமிறங்கினார். பொதுவாக, ஐசிசி தொடர்களுக்கு மட்டும் ஒவ்வொரு அணிக்கும் பிரத்யேக ஜெர்ஸி வடிவமைக்கப்படுவது வழக்கம். அந்த தொடருக்கு மட்டுமே குறிப்பிட்ட ஜெர்ஸிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முடிவடைந்த பின்னரும், அதே ஜெர்ஸியுடன் களமிறங்கியது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2ஆவது போட்டியில், 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் பலமான இந்திய அணி, அனுபவம் குறைவான வெஸ்ட் இண்டீஸ் அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.