இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது முதல் போட்டி நினைவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவர் தனது அதிரடி ஆட்டத்தால் பிரபலமானவர். குறிப்பாக இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் சில கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் போட்டி குறித்த நினைவை பதிவிட்டுள்ளார். அதில்,“முதல் முறையாக நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு ஆன போது எடுக்கப்பட்ட புகைப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ராகுல் திராவிட், விஜய் தஹியா ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படத்தையும் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.
யுவராஜ் சிங் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் கோப்பை தொடரில் கென்யாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இவர் இந்தியா சார்பில் 304 ஒருநாள் போட்டியில் களமிறங்கி 8701 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 சதங்களும் 42 அரைசதங்களுக்கும் யுவராஜ் சிங் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.