விளையாட்டு

யுவராஜ் சிங் இப்படி செய்யலாமா? பிசிசிஐ அதிகாரிகள் அதிருப்தி

யுவராஜ் சிங் இப்படி செய்யலாமா? பிசிசிஐ அதிகாரிகள் அதிருப்தி

webteam

ரஞ்சி போட்டிகளில் விளையாடாமல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டுள்ள யுவராஜ் சிங் மீது பிசிசிஐ அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

சமீபத்திய ரஞ்சி தொடரில் பஞ்சாப் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடவில்லை. விதர்பாவுக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் விளையாடி 20 மற்றும் 42 ரன்களை எடுத்தார். இந்நிலையில் ரஞ்சிப் போட்டியில் ஆடாமல், தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற் தகுதி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். யோ-யோ டெஸ்ட்டில் தேர்வு பெறாததால் இந்திய கிரிக்கெட் அணியில் அவர் இடம்பெறவில்லை. அதில் இடம்பெறும் நோக்கில் உடற்பயிற்சியில் இங்கு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இலங்கையுடன் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு இந்த பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சி போட்டியை விட்டுவிட்டு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி பெற்று வருவது கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது , ‘யுவராஜ் சிங், யோ-யோ டெஸ்டிற்காக சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உடற்தகுதியை பூர்த்தி செய்து விட்டு ரன்கள் எடுக்காமல் இருந்தால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வாகி விடுவாரா? இலங்கைத் தொடருக்குத் தேர்வாவதற்கு ரஞ்சி போட்டிகளில் அவர் ரன்கள் குவிக்க வேண்டும்’ என்றார்