விளையாட்டு

300 எனக்கு பெருமை: யுவராஜ் சிங்!

300 எனக்கு பெருமை: யுவராஜ் சிங்!

Rasus

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு 300-வது போட்டியாகும். 35 வயதான யுவராஜ்சிங் இதுவரை 299 ஆட்டத்தில் பங்கேற்று 14 செஞ்சுரி உள்பட 8,622 ரன்கள் எடுத்துள்ளார். 

இதுபற்றி யுவராஜ் சிங் கூறும்போது, இது எனக்கு பெருமையான விஷயம். எனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். அதை தாண்டி 300-வது ஆட்டத்துக்கு வந்திருக்கிறேன். என்ன தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதுதான் என் குணம். அதைதான் எப்போதும் கடைபிடிக்கிறேன். நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இந்த நிலையில் எனது பழைய வருத்தமான நிகழ்வுகள் பற்றி பேசவிரும்பவில்லை. இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடுவேன்’ என்றார்.