விளையாட்டு

ஓய்வுப் பெற்றார் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான்!

ஓய்வுப் பெற்றார் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான்!

jagadeesh

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் யூசுப் பதான். அதன் பின்பு இந்தியாவுக்காக 22, டி20 போட்டிகளில் விளையாடி 236 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய யூசுப் பதான் 810 ரன்களை எடுத்துள்ளார். மேலும் அதில் இரண்டு சதங்களும், மூன்று அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 123 ரன்களை எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 174 போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான் 3204 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் சகோதரராவார் யூசுப் பதான். இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட யூசூப் பதான்.

"அதிகாரபூர்வமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெறுகிறேன். இந்த நேரத்தில் என்னுடைய குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள், அணிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய வருங்கால முயற்சிகளுக்கும் உங்களின் அனைவரது ஆதரவும் இருக்கும் என நம்புகிறேன்" என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் யூசுப் பதான்.