விளையாட்டு

பாட்டுப்பாடி நெகிழ்ச்சி: யூனிஸ் கான் டாட்டா!

பாட்டுப்பாடி நெகிழ்ச்சி: யூனிஸ் கான் டாட்டா!

Rasus

தான் எடுத்த முதல் ரன் மறக்க முடியாதது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான், சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக அவர் செய்த சாதனைகளை பாராட்டி விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் பேசிய அவர், ‘என் வாழ்க்கையில் நான் எடுத்த முதல் ரன் மறக்க முடியாதது. அதற்குப் பிறகு அதை நான் திரும்பிப் பார்த்ததில்லை’ என்றார். பின்னர், புகழ்பெற்ற இந்தி பாடலான, ’சல்தே சல்தே மேரே யே கீத் யாத் ரக்னா’ என்ற பாடலை ராகத்துடன் பாடி நெகிழ்ச்சியுடன் கையசைத்து விடைபெற்றார் யூனிஸ்கான்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாகிர் அப்பாஸ், ரசாக், ஜாவித் உள்ளிட்ட பலர், அவரின் சாதனைகளை பாராட்டினர்.