விளையாட்டு

”நீங்கள் ஒரு உண்மையான இன்ஸ்பிரேஷன்” - சுஷாந்த் சிங் குறித்து ரெய்னா நெகிழ்ச்சி ட்வீட்

”நீங்கள் ஒரு உண்மையான இன்ஸ்பிரேஷன்” - சுஷாந்த் சிங் குறித்து ரெய்னா நெகிழ்ச்சி ட்வீட்

webteam

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அவரது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் சுரேஷ் ரெய்னா சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அவர் துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “ சகோதரரே நீங்கள் எப்போதும் எங்களின் இதயத்தில் உயிருடன் இருக்கிறீர்கள், உங்களது ரசிகர்கள் எல்லாவற்றையும் விட உங்களையே அதிகம் இழந்ததாக உணர்கிறார்கள்.

எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது. இங்குள்ள தலைவர்கள் உங்களுக்கு நீதி வழங்கும் வகையில், உங்களது இறப்பில் சம்பந்தப்பட்ட சிறு கல்லை கூட விடமாட்டார்கள். உண்மையில் நீங்கள் ஒரு உத்வேகமளிக்ககூடிய மனிதர் என்று பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு சுஷாந்த் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.