விளையாட்டு

‘பந்து வீசுவதற்கு முன் கெயிலின் 2 கால்களையும் கட்டிவிட வேண்டும்’ கலாய்க்கும் அஷ்வின்!

‘பந்து வீசுவதற்கு முன் கெயிலின் 2 கால்களையும் கட்டிவிட வேண்டும்’ கலாய்க்கும் அஷ்வின்!

EllusamyKarthik

துபாயில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 38வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின.

அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 13 பந்துகளில் 29 ரன்களை சேர்த்து பேட்டிங்கில் மிரட்டினார். 

டெல்லிக்கு தோல்வி பயத்தை காட்டிக் கொண்டிருந்த அவரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 

ஆட்டத்தின் போது கெயிலுக்கு பந்து வீசுவதற்கு முன்னர் கெயிலின் ஷூ லேஸை அஷ்வின் கட்டிவிட்டார்.

அந்த காட்சி ‘கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு’ என்பதை உணர்த்தியதாக ரசிகர்ள் பலரும் சொல்லியிருந்தனர்.

இந்நிலையில் அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கிறிஸ் கெயிலை லேசாக கலாய்த்தும் உள்ளார் அஷ்வின்.

“அவருக்கு பந்து வீசுவதற்கு முன்னர் மறக்காமல் அவரது இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.

இந்த நாள் கடினமானதாக அமைந்தாலும் இந்த தோல்வியிலிருந்து நாங்கள் சுவற்றில் பட்டு திரும்பும் பந்தாக பவுன்ஸ் ஆவோம் எனவும் அந்த ட்வீட்டில் அஷ்வின் தெரிவித்துள்ளார்.