விளையாட்டு

இந்திய ஜெர்ஸியில் நடராஜன் - நிஜமாகிறது ‘யார்க்கர்’ பவுலரின் கனவு

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனில் துல்லியமாக யார்க்கர் வீசி கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரது கவனத்தை ஈர்த்தவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சேலம் - சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழக வீரர் தங்கராசு நடராஜன். 

‘யார்க்கர்’ நடராஜன் என பரவலாக அறியப்படுபவர்.

இந்த சீசனில் மட்டும் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு அவர் வீசிய 377 பந்துகளில் 136 பந்துகள் டாட் பால்களாக வீசப்பட்டுள்ளன. அதன் மூலம் இந்த சீசனில் டாட் பால்கள் வீசிய டாப் 10 பவுலர்களில் ஒருவராகவும் அவர் இணைந்துள்ளார். 

லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது அஷ்வினுடனான யூடியூப் நேர்காணலில் ‘இந்தியா ஆடணும்ங்கிறது என் கனவு’ எனவும் நடராஜன் சொல்லியிருந்தார். 

இப்போது அவரது கனவு நிஜமாகியுள்ளது. முதலில் பேக் அப் பவுலராக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியில் சேர்க்கப்பட்ட அவர் வருண் சக்கரவர்த்தி காயம்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் ப்ளூ ஜெர்சியில் கலக்க உள்ளார் அவர். இந்திய ஜெர்ஸியில் அவர் விளையாடுவதை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர். இதனை தங்களது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.