விளையாட்டு

WTC Final : 7 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாற்றம் - ஷமி அபாரப் பந்துவீச்சு

EllusamyKarthik

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்று காலை முதல் இதுவரையிலான ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது அந்த அணி. 

ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோலஸ், வால்டிங், கிராண்ட்ஹோம் மற்றும் ஜேமிசன் என ஐந்து பேட்ஸ்மேன்கள் 75 ரன்களை சேர்ப்பதற்குள் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இந்திய அணி  சார்பில் ஷமி அபாரமாக பந்து வீசி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் இதுவரை நான்கு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி உள்ளார். 

இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடி வருகிறார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நிலை பேட்ஸ்மேன் அவர் என்பதை தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் அவர். 164 பந்துகளில் அவர் 43 ரன்களை எடுத்துள்ளார். நியூசிலாந்து அணி 89 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்துள்ளது.