விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் ஐந்தாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதில் தாமதம்

EllusamyKarthik

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் ரிசர்வ் டே என ஒரு நாளை கூடுதலாக ஒதுக்கி வைத்துள்ளது ஐசிசி. அதன்படி நாளை இந்த போட்டியை நடத்துவதற்கான கடைசி நாளாக பார்க்கப்படுகிறது. அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். 

இங்கிலாந்தில் ஐசிசியின் மிகமுக்கிய தொடர்களை நடத்த வேண்டாம் என ரசிகர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டரை ஆண்டுகால காத்திருப்புக்கு இந்த போட்டியில் முடிவு எட்டப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.