இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா, தோனி போன்று ஆட வேண்டும் என்று சொன்னார்.
அவர் கூறும்போது, தோனி மற்றவர்களை மட்டம்தட்டி பேசமாட்டார். வார்த்தை போரில் எப்போதும் அவர் ஈடுபடுவதில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. தோனி பாசிட்டிவானவர். அவரது அப்ரோச் எனக்குப் பிடிக்கும். அவரிடம் இருந்து சில விஷயங்களை கற்றிருக்கிறேன். இருந்தாலும் சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடித்தமான விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட்தான். அவர் முன்மாதிரியான
விக்கெட் கீப்பர். அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். மார்க் பவுச்சர், இயான் ஹீலி ஆகியோரும் சிறப்பானவர்கள். இலங்கை ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சவாலான பந்து வீச்சை அனுபவித்து கீப்பிங் செய்து வருகிறேன். நிறைய பந்துகள் கீப்பரின் கைக்கு வருவது நல்ல விஷயம்தான்’ என்று சொன்னார்.