விளையாட்டு

உலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு

உலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு

rajakannan

உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டி தொடருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான கிரிக்கெட் அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. கடந்த 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் :

சர்பராஸ் அகமது 
அபித் அலி 
பாபர் அசாம் 
பஹிம் அஷ்ரப் 
பகார் ஜமான் 
ஹரிஸ் சோஹேல் 
ஹசன் அலி 
இமத் வாசிம் 
இமம்-உல்-ஹாக் 
ஜூனத் கான் 
முகமது ஹபீஸ் 
ஷபாத் கான் 
ஷஹீன் ஷா அப்ஃரிதி 
சோயிப் மாலிக் 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அணி பட்டியலை வெளியிட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.