டாப் 10 ஸ்போர்ட்ஸ் PT
விளையாட்டு

Top 10 Sports | ’ஸ்பான்சர் இல்லாமல் Airport-ல் தூங்கிய குகேஷ்' To பி.வி. சிந்துக்கு நிச்சயதார்த்தம்!

இன்றைய நாளில் விளையாட்டில் நடந்த டாப் 10 ஸ்போர்ட்ஸ் செய்திகளை பார்க்கலாம்..

Rishan Vengai

ஸ்பான்சர் இல்லாமல் Airport-ல் தூங்கிய குகேஷ்..

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வரலாற்று சாதனை படைத்தார்.

தன்னுடைய மகனின் செஸ் கேரியருக்காக பணம் இல்லாமல் 2 வருடங்கள் மிகப்பெரிய கடினமான காலங்களை எதிர்கொண்டதாக குகேஷின் தந்தையான டாக்டர் ரஜினிகாந்த் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

குகேஷ்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் குகேஷ் தந்தை, மகனின் கேரியருக்காக தன்னுடைய வேலையை விட்டு வெளிநாட்டுக்கு மகனுடன் பயணம் செய்ததாகவும், பணமில்லாமல் சரியான நேரத்தில் தங்களால் எங்கும் சென்றுவர முடியாமல் குகேஷ் ஏர்போர்ட்டிலேயே படுத்து உறங்கி டோர்மெண்ட்களில் கலந்துகொள்ள சென்றதாகவும் கூறியுள்ளார்.

பண பிரச்னை குறித்து கூறியிருக்கும் குகேஷ், தனக்கு யாரும் ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை என்றும், அப்பாவின் வருமானம் இல்லாமல் அம்மாவின் வருமானத்தை மட்டுமே வைத்து கடினமான நேரங்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

பும்ரா மோசமான பவுலராக மாறுவார்..

அக்தர் - பும்ரா

டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவால் நீண்டகாலத்திற்கு சிறந்து விளங்க முடியாது என்றும், விரைவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார். விவரமாக அறிய..

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ISL).. பெங்களூரு - கோவா ஆட்டம் சமன்

இந்தியன் சூப்பர் லீக்

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் 2-2 என போட்டி சமன்செய்யப்பட்டது.

பெண்கள் ஜூனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

21 வயதுக்குட்பட்டோருக்கான ஒன்பதாவது பெண்கள் ஜுனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியானது மஸ்கட்டில் நடந்துவருகிறது. இதில் A பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் அணியான இந்தியா, இன்று நடைபெற்ற அரையிறுதிபோட்டியில் ஜப்பானை எதிர்கொண்டு விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் மும்தாஜ் கான், சாக்ஷி ராணா மற்றும் திபீகா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

ஓய்வை அறிவித்த முகமது அமீர்..

2017 சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியாவிற்கு எதிரான ஃபைனலில் ரோகித்தை 0 ரன்னிலும், கோலியை 5 ரன்னிலும் வெளியேற்றி கோப்பையை தட்டிப்பறித்த பாகிஸ்தான் பவுலர் முகமது அமீர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

குகேஷ் உடன் மோதுவதற்கு விருப்பமில்லை - கார்ல்சன்

நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வரலாற்று சாதனை படைத்தார். ஆனால் குகேஷ் இறுதிப்போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, அவருடைய மூவ்ஸ் மோசமாக இருப்பதாக கார்ல்சன் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் குகேஷின் வெற்றிக்கு பிறகு பேசியிருக்கும் கார்ல்சன், நான் இனி இந்த சர்க்கசின் ஒரு பகுதியாக இல்லை. குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.

சிக்சரில் க்றிஸ் கெய்லின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த பவுலர்..

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 சிக்சர்களை அடித்த நியூசிலாந்தின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ, டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்சர்களை விளாசி கிறிஸ்கெயிலின் சாதனையை சமன்செய்துள்ளார்.

ஓய்வை அறிவித்திருக்கும் டிம் சவுத்தீ கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் இரண்டாவது இன்னிங்ஸில் கெயில் மற்றும் கில்கிறிஸ்ட்டின் சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புரோ கபடி: அரியானாவை வீழ்த்திய தபாங் டெல்லி!

11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி இடையிலான போட்டியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அபார வெற்றி பெற்றது.

நிச்சயம் கபில்தேவ் கேட்டதை செய்வேன் - வினோத் காம்ப்ளி

நாங்கள் நோயுடன் போராடும் வினோத் காம்ப்ளிக்கு உதவ வேண்டுமானால், முதலில் அவர் அனைத்திலும் இருந்து வெளிவர நினைக்க வேண்டும். மறுவாழ்வு மையத்திற்கு சென்று குணமாகி திரும்ப நினைத்தால் நாங்கள் உதவிசெய்கிறோம் என கூறியிருந்தார்.

அதற்குபதலளித்து பேசியிருக்கும் காம்ப்ளி, கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறேன், எனது மனைவி அதிலும் என்மேல் தனியாக கவனம் எடுத்து பார்த்துக்கொள்கிறார். கபில்தேவ் தான் முதலில் எனக்கு உதவுவதாக கூறினார், அவர் கூறியதை போல நான் மறுவாழ்வுக்கு சென்று குணமாகிவிட்டு திரும்ப நினைக்கிறேன். என் குடும்பம் என்னருகில் இருக்கும்போது என்னால் நிச்சயம் செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

பி.வி. சிந்துக்கு நிச்சயதார்த்தம்..

இந்தியாவிற்காக 2 ஒலிம்பிக் பதக்கம் வென்று பெருமை சேர்த்த பிவி சிந்துவுக்கும், ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

pv sindhu

சிந்துவின் வருங்கால கணவரான வெங்கட தத்தா சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்குமான நிச்சயதார்த்த புகைப்படங்களை பிவி சிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.