விளையாட்டு

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை பதக்கம் வென்ற 4வது இந்திய வீரர்

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை பதக்கம் வென்ற 4வது இந்திய வீரர்

webteam

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி வெண்கலம் வென்றார்.

ஜெர்மனியில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி அரையிறுதியில் தோல்வி அடைந்தார். எனினும் அரையிறுதி வரை முன்னேறியதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற 4ஆவது இந்தியர் என்ற சிறப்பை பிதூரி பெற்றுள்ளார். 56 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் டியூக் ராகன், கவுரவ் பிதூரியை வென்றார்.