உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தெரிவித்துள்ளார்.
தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்தப் போட்டியில், முதல் கேமை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது கேமை 15-21 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி கேமை 21-19 என பி.வி.சிந்து போராடி வென்றார். சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் செயாங் அன் உடன் மோதுகிறார்.