விளையாட்டு

"டெஸ்ட் கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் புரிந்துவிட்டது" பாபர் அசாம்

jagadeesh

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நுணுக்கங்கள் புரிந்துவிட்டது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அசாம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய இளம் வீரரான பாபர் அசாம், 2019 இல் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 616 ரன்களை குவித்துள்ளார். அதில் தலா மூன்று சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். மிக முக்கியமாக கடந்தாண்டில் பாபர் அசாமின் சராசரி மட்டும் 68.44 ஆகும். இப்போது பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பாபர் அசாம் செயல்படுகிறார்.

கடந்தாண்டு, தான் விளையாடியது குறித்து பாபர் அசாம் கூறியதாவது, "2019 இல் நான் கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டேன். டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்ற நுணுக்கத்தையும் அறிந்துக்கொண்டேன். நான் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை. அதனால்தான் கடினமாக உழைத்து என் தவறுகளை திரித்திக் கொண்டேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த பாபர் அசாம் " தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிதான் எனக்கு மிகவும் தன்னம்பிக்கையை அளித்தது. அதிலும் டேல் ஸ்டெய்ன் போன்ற பவுலர்களின் பந்துகளை எதிர்கொண்டு விளையாடி சதம் அடித்தது எனக்கு நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கைதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடிக்க எனக்கு உதவியது. நான் ஆடியதிலேயே மிகச் சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்தததுதான். அதேபோல 2019 உலகக் கோ்பை தொடரில் சிறப்பாக விளையாடியதும் மறக்க முடியாதது" என்றார் அவர்.