விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய மகளிர் அபாரம்

மகளிர் உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய மகளிர் அபாரம்

EllusamyKarthik

நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீசத்தியுள்ளது இந்தியா. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 317 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் என இருவரும் சதம் விளாசினார். 

318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் விக்கெட் இழக்காமல் 100 ரன்களை சேர்த்தனர். அதனால் இந்திய அணியின் மீது அழுத்தம் அதிகமாக இருந்தது. 

13-வது ஓவரில் அந்த அழுத்தத்தை போக்கினார் ஆஃப்-பிரேக் பவுலர் ராணா. வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டாட்டினை அவர் வெளியேற்றினார். அதன் பிறகு அந்த அணி 62 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் தோல்வியை தழுவியுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து மாதிரியான அணிகளை நடப்பு தொடரில் அந்த அணி வீழத்தியிருந்தது. அதனால் இந்த வெற்றி இந்திய அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளை உத்வேகத்துடன் அணுக உதவும்.