விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: வெற்றி நடை போடும் தென்னாப்பிரிக்கா!

EllusamyKarthik

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் டிவைன் 93 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை லவ்ரா வால்வார்ட், கேப்டன் லுஸ் ஆகியோர் அரைசதம் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். 8 விக்கெட்டுகளை இழந்த போதும் மரிஷானே காப் மட்டும் கடைசி வரை களத்தில் நின்று, கடைசி ஓவரில் பவுண்ட்ரி அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. அதோடு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் சுற்றில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் நாக்-அவுட் சுற்றான அரையிறுதிக்கு முன்னேற முடியும். முதல் இரண்டு இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உள்ளன. அதனால் அடுத்த இரண்டு இடத்தை பிடிக்க இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் கடுமையாக முயற்சி செய்யும்.