விளையாட்டு

டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் இந்தியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? முடிவு ஐசிசி கையில்!

EllusamyKarthik

இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து உட்பட 16 சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்நிலையில் உலக கோப்பை தொடர் இந்தியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் தொடர் பாதியிலேயே நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தான் இந்த கேள்வி எழ காரணம்.  

குறிப்பாக பயோ செக்யூர் பபுளில் உள்ள வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொடரை ஐக்கியர் அரபு அமீரகத்தில் நடத்த வேண்டுமென்ற குரலும் கிரிக்கெட் உலகில் ஒலித்து வருகின்றன. அப்படி அமீரகத்தில் தொடர் நடந்தாலும் இந்தியா தொடரை நடத்தும் நாடாக பங்கேற்கலாம் என்ற ஆலோசனைகளும் ஐசிசிக்கு கொடுக்கபட்டு வருகிறதாம். 

“இந்தியாவின் நிலையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். காத்திருப்பது தான் இப்போதைக்கு சிறந்து முடிவு என கருதுகிறோம். உலக கோப்பை தொடர் என்பதால் ஜூலை மாதம் வரை நிலைமை சீராகிறதா என பார்ப்போம். அதன் பிறகு தான் இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்” என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.