புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நாளை தொடங்குகின்றன.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ் பெற்றது விம்பிள்டன் டென்னிஸ். உலக டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த இந்த போட்டிகள் வரும் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் இந்த தொடரில் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் போட்டியில் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கபோலோவ் - ஐ எதிர்கொள்ள உள்ளார். இத்தொடரில் வென்றால் அது ஃபெடரரின் 8வது விம்பிள்டன் பட்டமாக இருக்கும். முக்கிய போட்டியாளர்களான ஆண்டி முர்ரே, நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோர் பலவீனமான நிலையில் உள்ளதால் ஃபெடரர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
பெண்கள் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகியோர் பங்கேற்கவில்லை. ஏஞ்சலிக் கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ், சிமோனா ஹேலப் ஆகியோர் மத்தியில் பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது.