ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில் குஜராத் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிடும்.
பேட்டிங்கில் ஹர்திக் பாண்டிட்யா (309 ரன்கள்), டேவிட் மில்லர் (287 ரன்கள்), சுப்மான் கில் (269 ரன்கள்) ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (15 விக்கெட்), லோக்கி பெர்குசன் (11 விக்கெட்), ரஷித் கான் ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 8 தோல்விகளை பெற்றுவிட்ட பின்னர்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை அணி மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளை மட்டும் தான் பெற்றுள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற வேண்டும். அந்த வகையில் மும்பை அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டது. இருப்பினும், அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றிகளை பெற்று, அடுத்த சீசனுக்காக வலுவான அணியை தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.
பேட்டிங்கில் திலக் வர்மா (307 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (290 ரன்கள்), இஷான் கிஷன் (225 ரன்கள்) நம்பிக்கையளிக்கின்றனர். ரோகித் சர்மா, பொல்லார்ட் உள்ளிட்டோர் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். அந்த அணியில் பவுலிங் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. இன்றைய ஆட்டத்திலாவது பந்துவீச்சு புத்துயிர் பெறுமா எனப் பார்க்கலாம். டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், லாக்கி பெர்குசன், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்