விளையாட்டு

தோனியின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

தோனியின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

webteam

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் 4வது ஒரு நாள் போட்டியில் வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்திய அணி முழு வீச்சில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சின்னசாமி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியபோதிலும், எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றியை வசமாக்கும் முனைப்பில் உள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தோனி தலைமையில் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையை, விராட் கோலி முறியடிப்பார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 30ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில், முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி, ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் ஆயத்தமாகி வருகிறது.