விளையாட்டு

எப்படி இருந்த மேட்ச் இப்படி ஆகிடுச்சே ?? வருத்தத்தில் பாக். ரசிகர்கள் !!

எப்படி இருந்த மேட்ச் இப்படி ஆகிடுச்சே ?? வருத்தத்தில் பாக். ரசிகர்கள் !!

EllusamyKarthik

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பார்வையாளர்களின் வருகையின்றி இங்கிலாந்து தற்போது பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

கடந்த ஐந்தாம் தேதியன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

நிதானமாக ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இரண்டாவது இன்னிங்க்ஸை 107 ரன்கள் முன்னிலையோடு பாகிஸ்தான் விளையாட துவங்கியது. இங்கிலாந்து இந்த போட்டியில் தோற்றுவிடும் என எதிர்பார்த்த அந்த அணியின் பவுலர்கள் பிராட், வோக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு திரும்ப செய்துள்ளனர். 

44 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் தற்போது 139 ரன்களை மட்டுமே குவித்துள்ளது பாகிஸ்தான். இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள சூழலில் பாகிஸ்தான் அணி 170 ரன்களை எட்டுவதற்குள் மீதமுள்ள இரண்டு விக்கெட்டையும் இழந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 255 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 300 ரன்கள் வரை சேஸ் செய்ய வேண்டியிருக்கும் எனவும் கணித்துள்ளனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.