நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாட உள்ளன.
இரு அணிகளும் மோதி விளையாடிய இந்த சீசனின் இரண்டு லீக் ஆட்டங்களிலும் ஹைதராபாத் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில், இரண்டாவது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்திலும் டெல்லியை வீழ்த்தியுள்ளது.
அதில் இரண்டு ஆட்டங்களிலும் மேட்ச் வின்னிங் பவுலிங்கை வீசி அசத்தியிருப்பார் ஹைதராபாத்தின் ரஷீத்.
முதல் லீக் ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் ரஷீத் வீழ்த்தியிருப்பார்.
அதனால் இன்றைய ஆட்டத்தில் ரஷீத் கானை சமாளிக்க அவரது பந்துவீச்சை கவனத்துடன் பார்த்து பக்குவமாக விளையாடவே டெல்லி பேட்ஸ்மேன்கள் முயற்சி செய்வார்கள்.
அதை மட்டும் செய்துவிட்டால் டெல்லி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்.