14 ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணியும், அவரது சிஷ்யன் ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி அணியும் களமிறங்குகின்றன.
இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் சென்னை 15 முறையும், டெல்லி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் கண்ட சறுக்கலில் இருந்து மீளும் முனைப்பில் சென்னையும், இளம் தலைவனின் கீழ் புதிய அத்யாயத்தைத் தொடங்கும் துடிப்பில் டெல்லி அணியும் மோதவுள்ளன. ஜெயிக்கப்போவது குருவா? சிஷ்யனா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.