கொரோனா பாதிப்புக்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. ஆனால் பயிற்சி பெரும் வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இல்லை.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்க்கலாம் என்று ரசிகர்கள் இப்போது ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனால் தோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்று மேலும் கவலை கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் இந்திய அணியின் பயிற்சிப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாததே காரணம். இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியினர் அடுத்த சில வாரங்களில் குஜராத் மாநிலம் அகமகாபாத்தில் இருக்கும் மோடேரா மைதானத்தில் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். ஆனால் இந்தப் பயிற்சி பெறும் வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.
2019 - 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட வீரர்களின் ஒப்பந்த்ததிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. எனவே ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்துக்கொள்ள இருப்பதாக பிசிசிஐ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியில் கலந்துக்கொள்வது குறித்து தோனியும் தங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் தோனியின் பெயர் பயிற்சி பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.