விளையாட்டு

12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..?

12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..?

Rasus

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் விதிகளை மீறியதற்காக செரீனா வில்லியம்ஸூக்கு அமெரிக்க டென்னிஸ் கழகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சனிக்கிழமை நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இரண்டாம் செட்டின் தொடக்கத்தில் பயிற்சியாளரிடம் இருந்து அறிவுரைகளை பெற்றார் செரீனா வில்லியம்ஸ். அது விதிமீறல் என நடுவர் செர்ஜியோ ரமோஸ் எச்சரித்தார். தொடர்ந்து தனக்கு எதிராக புள்ளிகள் வழங்கியதால் நடுவர் செர்ஜியோ ரமோஸ் மீது ஆத்திரமடைந்த செரீனா வில்லியம்ஸ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திருடன் மற்றும் பொய்யர் என்று திட்டினார். இதற்கு மன்னிப்பு கோருமாறு நடுவர் வலியுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த செரினா தமது நடத்தையை நடுவர் தவறாக சித்தரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

திடீரென தனது டென்னிஸ் மட்டையை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். பயிற்சியாளரிடம் இருந்து அறிவுரை பெற்றது, தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது, டென்னிஸ் மட்டையை ஓங்கி அடித்தது ஆகிய மூன்று விதிமீறல்களுக்காக செரினாவுக்கு அமெரிக்க டென்னிஸ் கழகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றெடுத்த செரினா, சில மாதங்களிலேயே சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். எனினும் பேறு காலத்துக்கு பிந்தைய உணர்வுகளால் அவர் அவதியடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் செரினா அதீத கோப நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.