விளையாட்டு

இவர் பாகிஸ்தானின் விராத் கோலியா?

இவர் பாகிஸ்தானின் விராத் கோலியா?

webteam

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா பாபர் அசாம் கூறினார். 

பேட்டி ஒன்றில் அவரிடம், ‘உங்களை பாகிஸ்தானின் விராத் கோலி என்று சொல்லலாமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘என்னை கோலியுடன் ஒப்பிட வேண்டாம். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். நான் இப்போதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறேன்.

எனக்கென்று தனி அடையாளத்தை பெறவே விரும்புகிறேன். நான் கோலி மாதிரி விளையாடவில்லை. எனது ஸ்டைல் வேறு மாதிரியானது. இருந்தாலும் இந்திய அணிக்காக அவர் ஆடுவது போல பாகிஸ்தான் அணிக்காக நானும் ஆட வேண்டும். வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும்  என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பயிற்சியாளர் ஆர்தர் கடந்த டிசம்பரில் பாபரை, கோலியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.