விளையாட்டு

திறந்த பஸ்சில் சென்னையை ரசித்த விசில் போடு ஆர்மி!

திறந்த பஸ்சில் சென்னையை ரசித்த விசில் போடு ஆர்மி!

webteam

சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, பிராவோ உள்ளிட்ட வீரர்கள் மேற்கூரை இல்லாத பேருந்தில் பயணம் செய்து சென்னையை ரசித்தனர். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நட்சத்திர விடுதியில் இருந்து பயிற்சிக்காக மைதானத்திற்கு வழக்கமாக செல்லும் பேருந்தில் செல்லாமல், மேற்கூரை இல்லாத பேருந்தில் சாலையில் பயணித்தனர்.

டோனி, ரெய்னா, பிராவோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்தனர். பிராவோ பாட்டுப் பாடி, ஆடினார். இதைக் கண்டதும் ரசிகர்கள் விசில் அடித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். 

மைதானத்திலும் வீரர்கள் பயிற்சி பெறுவதை காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வருவதால் ஐபிஎல் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.