விளையாட்டு

செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்றால் என்ன? அதை பெறுவது எப்படி?

webteam

செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்றால் என்ன? அதை பெறுவது எப்படி? செஸ் போட்டியில் உள்ள மற்ற பட்டங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

செஸ் வீரர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கிராண்ட் மாஸ்டர் பட்டம். செஸ் விளையாடும் அனைவருக்கும் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். ஆனால், இதற்கு விடாமுயற்சி மட்டுமின்றி தொடர்ச்சியான வெற்றிகளை பெறுவது அவசியம்.

அதாவது சர்வதசே செஸ் கூட்டமைப்பின் கீழ் இரண்டாயிரத்து 500 புள்ளிகளை கடந்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு, தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும்.

கிராண்ட் மாஸ்டர் மட்டுமின்றி செஸ் கூட்டமைப்பு மூலம் பதிவு செய்து விளையாடி வரும் வீரர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் பல்வேறு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வீரர்களுக்கும் மாத இறுதியில், அவர்கள் விளையாடிய போட்டிகள், எதிர்கொண்ட போட்டியாளர்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

அதில், 1,800 முதல் 2,000 புள்ளிகள் பெற்ற வீரருக்கு A CLASS PLAYER என்ற பட்டம் வழங்கப்படும். இதே போன்று 2,000 புள்ளிகளை கடந்தால், EXPERT பட்டம் கிடைக்கும். 2,200 புள்ளிகளுக்கு CANDIDATE MASTER பட்டமும், 2,300 புள்ளிகளுக்கு FIDE MASTER பட்டமும் வழங்கப்படும்.

2,400 புள்ளிகளுடன் முக்கிய சர்வதேச தொடர்களில் 3 மூன்று முறை பங்கேற்று, அதில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதே போன்று 2,700 புள்ளிகள் பெற்ற வீரர்களுக்கு சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைக்கும். இந்தியாவில் இதுவரை 6 வீரர்கள் மட்டுமே சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளனர்.