நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை பேட் செய்து வருகிறது.
இந்த போட்டியில் டெல்லி அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு விளையாடுகின்றனர்.
டெல்லி அணி வீரர் மோகித் ஷர்மாவின் தந்தை காலமானதால் அவரது மறைவிற்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டையை கட்டிக்க கொண்டு டெல்லி வீரர்கள் விளையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.