விளையாட்டு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டி20 போட்டி - தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டி20 போட்டி - தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

JustinDurai

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடக்கிறது.  

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

எஞ்சிய இரு ஆட்டங்கள் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்ட கேப்டன் ரோகித், முழு உடல்தகுதியுடன் களமிறங்கத் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.  முன்னிலையை அதிகரித்து தொடரை கைப்பற்ற இந்தியாவும், 2-2 என சமன் செய்ய வெஸ்ட் இண்டீசும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இதையும் படிக்க: ரோகித் சர்மாவை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அசத்தல்- டி20 போட்டியில் செய்த சாதனை