விளையாட்டு

அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் - மழையால் நிறுத்தப்பட்ட போட்டி

அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் - மழையால் நிறுத்தப்பட்ட போட்டி

webteam

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயில் மற்றும் இவின் லெவிஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 10 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 115 ரன்கள் எடுத்திருந்த போது, லெவிஸ் 43 (29) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கெயில் 73 (41) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த சாய் ஹோப் மற்றும் சிம்ரான் ஹெட்மயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. ஹோப் 19 (40) ரன்களுடனும், ஹெட்மயர் 18 (23) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழைப் பொழிவு நின்றதால் ஆட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஓவர்கள் குறைக்கப்படலாம்.