விளையாட்டு

தினேஷ் கார்த்திக் டக் ! வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

தினேஷ் கார்த்திக் டக் ! வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஐசிசி உலக லெவன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒரு டி20 போட்டி நேற்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. ஐசிசி உலக லெவன் அணிக்கு பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி கேப்டனாக இருந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அதிபட்சமாக எவின் லெவிஸ் 58 ரன் எடுத்தார். இதற்கு அடுத்தப்படியாக ராம்தின் மற்றும் சாம்யூல்ஸ் தலா 43,44 ரன்களை குவித்தனர். உலக லெவன் அணியின் ஐபிஎல் புகழ் ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து இமாலய இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய உலக லெவன் அணி 16.4 ஓவரில் 127 ரன்களுக்கு சுருண்டது. இந்த அணியில் இலங்கையின் திசேரா பெரேரா அதிகபட்சமாக 61 ரன் குவித்தார். உலக லெவன் அணியில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் "டக்" அவுட்டாக வெளியேறினார். உலக லெவன் அணியின் கேப்டன் அப்ரிதி 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெஸ்ட் இண்டீசின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.